கன்னியாகுமரியில் வாகன நுழைவு கட்டண உரிமம் ரத்து

கன்னியாகுமரியில் வாகன  நுழைவு கட்டண உரிமம் ரத்து
பைல் படம்
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததால், வாகன நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு வரும் கார், பஸ் உட்பட நான்கு சக்கர வாகனங்களுக்கான நுழைவு கட்டணம், சீசன் கால கட்டணம் போன்றவை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு, தனியார் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஆதாரத்துடன் புகார் எழுந்தது. இதனையடுத்து தனியாரின் உரிமத்தை ரத்து செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால் தற்போது கன்னியாகுமரிக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் எவ்வித கட்டணம் செலுத்தாமல் சென்று வந்தன.

Tags

Next Story