எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

 புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் 

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி மற்றும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை இணைந்து எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்கேபி கல்வி குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். கல்விக் குழுமத்தின் இணை செயலாளர் கே.வி. அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர். சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து வருகை புரிந்த மருத்துவ குழுவினர் மாணவ மாணவிகளிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் காணொளிகளை மாணவ மாணவிகளும் காண்பித்து, நோய்க்கான அறிகுறிகள், நோய் பரவும் காரணங்கள், மற்றும் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முகாமின் முடிவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பாஸ்கரன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சையத் ஜஹிருத்தீன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story