புற்றுநோய் விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் நிறுவனத்தில் உலக புற்றுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் லோகு வரவேற்றார். உதவி பேராசிரியை மேகலை, உறுதிமொழி வாசகங்களை படிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். உதவி பேராசிரியை பவுலின் சங்கீதா மாணவர்களுக்கு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளை கூறி, நோய் வராமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியை ராஜேஷ்வரி செய்திருந்தார். உதவி பேராசிரியை ராணி நன்றி கூறினார்.
Next Story