ராசிபுரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேஷன் டிரஸ்ட் சார்பில் கேன்சர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேசன் டிரஸ்ட் சார்பில், கேன்சர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில், பெண்கள் பிரிவில் 14 வயது முதல் 17 வயதுடைவர்களுக்கு 5 km தூரமும், ஆண்கள் பிரிவில் 18 வயது முதல் 25 வயதுடையவர்களுக்கு 10 km தூரமும் கொண்ட போட்டியில் 900க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டியை மருத்துவர் சுகவனம், நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 km பிரிவில் மல்லூர் அரசு மாதிரிப் பள்ளி மாணவர் ஆகாஷ் முதலிடமும், பெண்கள் பிரிவில் நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவி நிவிதா முதலிடமும் பிடித்தார்.

10 km பிரிவில் KSR கல்லூரி மாணவர் வினித் முதலிடமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவி வினோதினி முதலிடமும் பிடித்தார். இப்போட்டியில், 2 பிரிவிலும் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story