புற்றுநோயை ஆரம்பத்திலேயே குணப்படுத்தலாம்- ஜோதிமணி

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் சரி செய்துவிடலாம் என கிராம மக்களுக்கு விளக்கம் அளித்தார்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா, ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் இன்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. இதன் தொடர்ச்சியாக ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் 100 நாள் திட்ட பணியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர்களது வாழ்வாதாரம், பணி சுமை மற்றும் அவர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவர்களிடம் விசாரித்த ஜோதிமணி, பின்னர் அவர்களிடம் பேசும்போது, பெண்கள் கர்ப்பப்பையில் புற்றுநோய் தாக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அதற்கு ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டு முறையான சிகிச்சை மேற்கொண்டால் சரி செய்து விடலாம் என கிராம மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story