ராஜீவ்காந்தி மருத்துவமனையில் புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.
மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் தலைமையில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பவானி, புற்றுநோய் கதிர்வீச்சு துறை அதிகாரி டாக்டர் விஜயஸ்ரீ, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை அதிகாரி டாக்டர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் புற்றுநோய் தின உறுதிமொழியை எடுத்தனர். தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் சார்பில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதனை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.
Next Story