அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மைய பணிகள் தீவிரம்!

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை மைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.90 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டப்படுகிறது. இதில் 2 பங்கு நிதியை தமிழக அரசும், ஒரு பங்கு நிதி ரோட்டரி மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக வசூல் செய்யப்படுகிறது. அதன்படி ரூ.60 கோடி தமிழக அரசு மாநகராட்சி மூலமாகவும், ரூ.30 கோடி தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்டு சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

ஏற்கனவே கிடைக்கப்பெற்ற நிதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், புற்றுநோய் பரவல் கண்டறியும் எந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் அந்தந்த சிகிச்சை பிரிவுகளில் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், புற்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகிற நேரத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாவர்கள் இதனால் அவர்ளுக்காக மறுவாழ்வு திட்டம் ரூ.1 கோடி மதிப்பில் பொழுதுபோக்கு அடிப்படையில் செயல்படுத்தப்படவும் இருக்கிறது.

Tags

Next Story