வேட்பாளர் அறிமுக கூட்டம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகக் கூட்டம் மாவட்ட திமுக சார்பில் நடந்தது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிமுகக் கூட்டம் மாவட்ட திமுக சார்பில் இன்று நடந்தது.

திமுக மாவட்ட செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். நவாஸ் கனி எம்பி பேசுகையில், இத்தேர்தலில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியை உரிய வளர்ச்சிக்கு பயன்படுத்தி உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் 3,500 மாணாக்கருக்கு கல்வி வளர்ச்சிக்கு உதவி உள்ளேன். தொழில் நிமித்தமாக வெளிநாடுகளில் கொரோனா பேரிடர் காலத்தில் சிக்கி தவித்தோர் நாடு திரும்ப வாடகை விமானங்கள் மூலம் உதவினேன். எதிரணியினரிடையே 2 இடத்திற்கான போட்டி இருக்கட்டும் இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், எதிரணி ஓபிஎஸ், இபிஎஸ் ஆக இருக்கட்டும். தலைவர் ஸ்டாலின் என்னிடம் கேட்டபோது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை மீண்டும் வெல்வோம் என உறுதியளித்தேன். அந்த வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. 25 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஓபிஎஸ் எதுவும் செய்யவில்லை. இதற்கு மேல் அவரை பற்றி பேச விரும்பவில்லை. 2023 ஆக.18 ல் மண்டபத்தில் நடந்த மீனவர் நல மாநாட்டில் ரூ.960 கோடி நிதி நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து சாதனை படைத்தவர். அனைத்து தொகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓபிஎஸ் போட்டியிடுவதால் கொஞ்சம் செலவு கூடும். அதிமுக வேட்பாளர ஜெய பெருமாள் வேளாண் கணேசன் நம்மிடம் உள்ளார். அதானி குவித்துள்ள கோடானு கோடி பணம் யாருடையது. கலைஞர் கருணாநிதி ஆட்சி மாற்றத்தை பற்றி ஒரு போதும் கவலை பட்ட தே இல்லை.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஜிஎஸ்டி வரி ஒதுக்கீடு செய்வதில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட திமுக அவைத் தலைவர்சத்தியமூர்த்தி, எம்எல்ஏக்கள் கருமாணிக்கம், முருகேசன், முன்னாள் மேயர் குழந்தைவேல், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், மாவட்ட காங் பொறுப்பாளர் செல்லத்துரை அப்துல்லா, இந்திய கம்யூ மாவட்ட செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை உள்பட பலர் பங்கேற்றனர்

Tags

Next Story