நாமக்கல்லில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்!

நாமக்கல் மாவட்டத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் களம் காணும், திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.பி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மூன்றாண்டு சாதனைகளையும், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்து உரையாற்றினர்.

நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER. ஈஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் AKP.சின்றாஜ், சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் தோழமை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story