திருப்பூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம்
பாஜக நமக்கு போட்டியே கிடையாது, நமக்கு போட்டி என்றால் திமுக தான், பூத் அளவில் அனைவரும் கடினமாக பணியாற்ற வேண்டும். இது நாம் கவுரவப் பிரச்சனை என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், கோவை மண்டல பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி பேசினார். திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் அருணாச்சலம் அவர்களின் அறிமுக கூட்டம் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையிலும், அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதி4ர்க்கட்சி கொறடாவும், கோவை மண்டல பொறுப்பாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, குணசேகரன், சிவசாமி, நடராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் பேசுகையில், 5 ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் எந்த பணிகளும் செய்யவில்லை, அதேபோன்று மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும், அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம் நாம் போட்டியாக திமுகவும் அதனைச் சார்ந்த கூட்டணிகளில் தான் எதிர்கொள்ளப் போகிறோம் பாஜக முன்பு நான்கு சதவீதம் இருந்தது, தற்போது அதிகபட்சம் 4 சதவீதம் வேணால் உயரும், கோவை திருப்பூரில் எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது, அவிநாசி அத்திக்கடவு திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம், பேருந்து நிலையங்கள், பாலங்கள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது, அதைதன் திமுகவினர் தற்பொழுது திறந்து வைத்த வருகின்றனர், தற்போது வரை திமுகவினரால் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி நாம் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும், ஒவ்வொரு பூத் ஏஜெட்டுகளும் அந்த பகுதியில் தான் பணியாற்ற வேண்டும்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூட்டணிகளுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும், வரும் தேர்தல் நமக்கு மிகவும் கௌரவ பிரச்சனை, எனவே நாம் அனைவரும் ஒன்று இணைந்து சிறப்பாக செயல்பட்டு 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிட வேண்டும், அதிமுகவில் மட்டும்தான் அடிமட்ட தொண்டன் கூட பொறுப்பு வகுக்கலாம், அதே போன்று திமுகவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறுங்கள், அருணாச்சலம் மிக அருமையான வேட்பாளர் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர், நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல அருணாச்சலத்திற்கு வெற்றி வாய்ப்பை சூடிட வேண்டும் என்று பேசினார். இதைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கு அனைவரும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.