வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவு!

கரூர் அருகே விராலிமலை பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.இத்தொகுதியில் 54 வேட்பாளர்களுடன், நோட்டா சின்னம் சேர்த்து மொத்தம் 55 சின்னங்கள் உள்ளன. இதையடுத்து, ஒவ்வொருவாக்குச்சாவடியிலும் தலா 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இங்கு மொத்தம் 255 வாக்குச்சாவடி உள்ளன. மையங்கள் விராலிமலை பேரவை தொகுதி, இலுப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமைநிறைவடைந்தது. கூடுதல் இயந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 1224 இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.இந்த இயந்திரங்கள் வரும் 18ஆம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
