வேட்பாளர் கோரிக்கை கருத்தரங்கு

வேட்பாளர் கோரிக்கை கருத்தரங்கு

கருத்தரங்கு 

உசிலம்பட்டியில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் உசிலம்பட்டியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும் திட்டங்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கோரிக்கையாக முன் வைப்பது குறித்த கருத்தரங்கு பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முத்துச்செழியன் தலைமையில் கல்லூரி முதல்வர் ஜோதி ராஜன் முன்னிலையில் நடைபெற்றது.,

இந்த கருத்தரங்கில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்., முன்னாள் எம்எல்ஏ கதிரவன் மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் இள மகிழன் , பாரதிய பார்வட் ப்ளாக் கட்சித் தலைவர் முருகன் ஜி, பெரிஸ் நிறுவனத்தின் இயக்குனர் பெரிஸ் மகேந்திரவேல் மற்றும் அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உசிலம்பட்டியின் வளர்ச்சிக்கான தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த கருத்தரங்கில் உசிலம்பட்டி பகுதியில் 26 முக்கிய பிரச்சனைகள் குறித்த புத்தகத்தை தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் முனைவர் ஜெயராமன் வெளியிட்டார் அதில்உசிலம்பட்டியில் விவசாயம் மீண்டும் செழிக்க 58 கால்வாய்க்கு நிரந்தரமாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை பெறுவது., உசிலம்பட்டியில் நறுமண தொழிற்சாலை மற்றும் சிப்காட் தொழிற்சாலையும் கொண்டு வருவது, உசிலம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றும் பாதை அமைப்பது, மலை பாதுகாப்பு சட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள இடங்களை மறு சீர் ஆய்வு செய்வது, வேளாண் பொருட்களை விற்பனை செய்ய ஒருங்கிணைந்த சந்தை அமைப்பது உள்ளிட்ட உள்ளிட்ட 26கோரிக்கையை வரும் தேர்தலில் எம்.பி. ஆக தேர்வாகும் மக்கள் பிரதிநிதி திட்டங்களை அமைத்து செயல்படுத்த கோரிக்கை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்தரங்கில் முடிவெடுக்கப்பட்டது.,

இந்த நிகழ்ச்சியில் அட்வகேட் ரவிச்சந்திரன், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், சமூக ஆர்வலர் ஜோதிபாசு பி கே எம் அறக்கட்டளை செயலாளர் லெனின் சிவா, ரோட்டரி சங்க ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story