ஆட்சியர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ஆட்சியர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் 24 - 05 - 2023 அன்று மாலை நடைபெற்றதது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரி செட்டி கரையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுப்பாதம், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்சிலி ராஜ்குமார், உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என பலர் உடன் இருந்தனர்.
Next Story