வேட்பாளர்கள் செலவு கணக்குகளை ஒத்திசைவு செய்ய அறிவுறுத்தல்

வேட்பாளர்கள் செலவு கணக்குகளை ஒத்திசைவு செய்ய அறிவுறுத்தல்
பைல் படம்
சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் செலவு கணக்குகளை ஒத்திசைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் ஏப்ரல் 10ஆம் தேதி செலவு கணக்குகளை ஒத்திசைவு செய்ய அறிவுரை. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேட்பாளர்கள் ஏப். 4 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மேற்கொண்ட செலவு கணக்குகளை ஏப்.10 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் முன்னிலையில் தேர்தல் செலவின பார்வையாளரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும்.

காலை 10 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர், பகல் 11 மணிக்கு அதிமுக வேட்பாளர், பகல் 12 மணிக்கு பாஜக வேட்பாளர், பிற்பகல் 1 மணிக்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், பிற்பகல் 2 மணிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர், பிற்பகல் 3 மணிக்கு விடியலை தேடும் இந்தியர்கள் கட்சி மற்றும் அனைத்து சுயேச்சைகள் தங்களது செலவு கணக்குகளை ஒத்திசைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story