வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் முன்னேற்பாடு பணிகள் !

வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் முன்னேற்பாடு பணிகள் !

 முன்னேற்பாடு பணிகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நேரில் சென்று முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பிற்கிணங்க, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் கடந்த 20-ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருந்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இதற்காக ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேலம், கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே போன்று வடக்கு தொகுதியில் 263, தெற்கு தொகுதியில் 240, ஓமலூர் தொகுதியில் 345, வீரபாண்டி தொகுதியில் 299, எடப்பாடி தொகுதியில் 321 என சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு 1,764 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், போலீஸ் துணை ஆணையர் பிருந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story