கஞ்சா பயிரிடப்படாத மாநிலம் தமிழகம் சட்ட துறை அமைச்சர் பேட்டி

கஞ்சா பயிரிடப்படாத மாநிலம் தமிழகம் சட்ட துறை அமைச்சர் பேட்டி

கஞ்சா பயிரிடப்படாத மாநிலம் தமிழகம் என நாகர்கோவிலில் சட்ட துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.


கஞ்சா பயிரிடப்படாத மாநிலம் தமிழகம் என நாகர்கோவிலில் சட்ட துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வருகை தந்தார் அப்போது நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது கஞ்சா பயிரிடப்படாத ஒரே பூமியாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சரே கஞ்சா வியாபாரத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆளுநரும் அந்த அமைச்சர் மீது வழக்கு தொடருவதற்கு அனுமதி தந்துள்ளார். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை சேர்ந்தவர்களில் தமிழ்நாட்டில் முக்கியமாக 16 ரவுடிகள் கஞ்சா கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இவர்களுக்கு சிவப்பு கம்பளம் வீசி வரவேற்கப்பட்டு கட்சியில் சேர்த்துகொள்ளப்பட்டுள்ளார்கள். போதை பொருளை கட்டுப்படுத்தும் அதிகாரிம் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. மாநில அரசிடம் இதற்கான முழு போலீஸ் அதிகாரம் கிடையாது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு? அதற்கு மற்றவர்கள் மீது பழிபோடுவது மோடியின் பார்மூலாவாக உள்ளது. ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பில் ஹெராயின் போன்ற பொருட்கள் குஜராத்தில் உள்ள கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியை சிறையில் வைத்திருப்பது பழிவாங்கும் படலத்தின் உச்சகட்டம். ஆனால் நீதிமன்றத்தின் மூலமாக அவருக்கு ஜாமின் மறுக்கப்படுவதால் அதனை பற்றி ஒன்றும் கூற முடியாது. குற்றபின்னணி உள்ளவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் திமுகவிற்கு இல்லை. இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் விஜயபாஸ்கள் இல்லம் தேடி குட்கா என்று பேசியுள்ளார். அவர் மீது வழக்கு இருப்பதை மறந்துவிட்டு பேசியுள்ளார், தற்போது கஞ்சா பயிரிடப்படாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார். பேட்டியின் போது நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story