அதிமுக தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - கருப்பண்ணன்

அதிமுக தயவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது - கருப்பண்ணன்

அதிமுக பொதுக்கூட்டம் 

மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக 52 வது துவக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் கருணாநிதி ஆட்சியை விட பத்து மடங்கு ஊழல் நிறைந்த ஆட்சியாக ஸ்டாலினின் ஆட்சி இருப்பதாகவும் , திமுக ஆட்சிக்கு வந்தால் பஞ்சம் தன்னாலே வந்துவிடும் , .தற்போது தஞ்சாவூர் வறண்டு காய்ந்து விட்டது , நாற்பதிலும் நாம் வெற்றி பெற்றால் அதிமுக இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது.மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிமுக தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

Tags

Next Story