மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவுகூடம் - மேயர் திறப்பு
சத்துணவு கூடம் திறப்பு
திருப்பூர் மாநகராட்சி 24 - வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாமன்ற உறுப்பினர் நாகராஜின் சொந்த பங்களிப்பில் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சத்துணவு கூடம் மற்றும் விழா மேடையை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்து சிறப்புறையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம் , பகுதி கழகச் செயலாளர் மின்னல் நாகராஜ் , மண்டல தலைவர் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் , மாநகர துணை செயலாளர் தேவி முருகேசன் , செயற்குழு உறுப்பினர் குணராஜ் ,வட்ட கழக செயலாளர் செல்வம், ரவிச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story