ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
X

திறன் மேம்பாட்டு பயிற்சி 

சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு புத்தாக்க பயிற்சி டாக்டர் ஏ.சண்முகசுந்தரம் கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் அன்புசெழியன் தலைைம தாங்கி, சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். கல்லூரி கல்வி இயக்குனர் சுபாஷினி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவை பி.பி.ஜி. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முத்துமணி கலந்து கொண்டு பேசினார். பயிற்சியானது நாக், என்.பி.ஏ. அங்கீகாரம் பெறுவதற்கான ஓ.பி.இ. பற்றியும், அதனை சிறப்பாக செயல்படுத்தும் முறை, செயல்படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள், கல்லூரியின் வளர்ச்சி பற்றியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் கணிப்பொறித்துறை தலைவர் புவனேசுவரி நன்றி கூறினார்.

Tags

Next Story