கரப்பான் பூச்சி போல் சாலையில் கவழ்ந்த கார்

கரப்பான் பூச்சி போல் சாலையில் கவழ்ந்த கார்

கவிழ்ந்த கார்

கொடைக்கானல் ஜெயின் கோவில் சாலையில் அதி வேகமாக சென்ற கார் இரண்டு சாலைகளின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக ஜெயின் கோவில் செல்லும் சாலை உள்ளது. இப்பகுதியில் தனியார் பள்ளி இயங்குவதால் காலை மற்றும் மாலை வேளையில் பரபரப்பாக காணப்படும்,

இந்நிலையில் இச்சாலையில் மாலை வேளையில் அந்தி சாயும் நேரத்தில் அதிவேகமாக கார் ஒன்று சென்றுள்ளது, அப்போது இரண்டு சாலைகள் நடுவே உள்ள தடுப்புசுவரை இடித்து ஏற்பட்ட விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது ,இதனையடுத்து காரை இயக்கிய நபர் மது போதையில் இருந்ததால் அங்கிருந்து நைசாக தப்பித்து ஓடிவிட்டார்,

மேலும் தான் வைத்திருந்த மது பாட்டிலையும் அருகில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றுள்ளார், மாலை அந்தி சாயும் வேளையில் இந்த சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, மேலும் இந்த விபத்தால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்,

விசாரணையில் கொடைக்கானல் எம்.எம். தெருவை சேர்ந்த விறகு செல்வம் என்பதும்,மது போதையில் அதிவேகமாக காரை இயக்கி சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, இந்த விபத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story