டூவீலர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்.
டூவீலர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்.
நாணப்பரப்பு அருகே தள்ளிச் சென்ற டூவீலர் மீது, கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், ஆத்தூர், குட்ட கடை, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் வயது 46. இவர் ஜனவரி 1ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில் சேலம்- கரூர் சாலையில் டூவீலரில் செல்லும்போது, திடீரென அவரது டூவீலர் பஞ்சர் ஆகிவிட்டது. இதனால், பஞ்சரான டூவீலரை கையால் தள்ளி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அதே சாலையில் வேகமாக வந்த, ஒடிசா மாநிலம், பெர்காம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆசிஷ் பண்டா என்பவர் ஓட்டி வந்த கார், கணேஷ் தள்ளி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணேசை உடனடியாக மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கணேசனின் மனைவி மல்லிகா, இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ஆசிஸ் பண்டா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Tags
Next Story