சின்னமனூர் அருகே கார் மோதி விபத்து
சின்னமனூர் அருகே கார் மோதி விபத்து
தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் சின்னமனூர் சீலையம்பட்டி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சரவணன் என்பவர் காரை வேகமாக ஓட்டி வந்து ரஞ்சித் குமார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் கீழே விழுந்த ரஞ்சித் குமாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story