புளிய மரத்தில் கார் மோதி மூவர் படுகாயம்

புளிய மரத்தில் கார் மோதி மூவர் படுகாயம்

புளிய மரத்தில் கார் மோதி மூவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் அரசுப்பட்டியை சேர்ந்தவர் கார் கட்டுபாட்டை மோதி மூவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், அரசுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மர வியாபாரி வெற்றிவேல் இவருக்கு வயது 30 இவரது மனைவி யோகலட்சுமி வயது 21 இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெற்றிவேல் தனது குடும்பத்துடன் தர்மபுரியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு மாமனார் நந்தகுமார், மாமியார் கீதா ஆகியோருடன் பிப்ரவரி 11 நேற்று மாலை 2 மணிக்கு திருப்பத்தூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணாபுரம் அடுத்த அரசம்பட்டி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தின் மீது மோதியது யோகலட்சுமி நந்தகுமார் கீதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story