அரசு பேருந்து மோதியதில் கார் சேதம்!
திருப்பத்தூர் அடுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு பேருந்து மோதியதில் கார் சேதம் அடைந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிவம் பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மனோகரன் வயது 58 இவர் தனது குடும்பத்துடன் திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு தேனீர் அருந்த குடும்பத்துடன் சென்றுள்ளார்.
திருப்பத்தூரில் இருந்து வேலப்பட்டி நோக்கி அரசு பேருந்தை ஆனந்தன் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்தார். அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அரசு பேருந்தும் அதேபோல் காரும் சேதமடைந்தது நல்வாய்ப்பாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை இந்த சம்பவம் குறித்து கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.