காா் திருட்டு வழக்கு: 2 பேருக்கு ஓராண்டு சிறை
சிறை
புளியங்குடியில் காா் திருட்டு வழக்கு: 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி பேருந்து நிலையப் பகுதியில் 2013ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்த தனது காா் திருடுபோனதாக, புளியங்குடியைச் சோ்ந்த மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சோ்ந்த தங்கரத்தினம் மகன் ராஜேஷ்(37), சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாதுரை மகன் திலிப்ராஜா (35) ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை சிவகிரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி காளீஸ்வரி விசாரித்து ராஜேஷ் உள்ளிட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 1,000 அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவிய புளியங்குடி போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
Next Story