காரும்-டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்து - பெண் படுகாயம்
காவல்துறை விசாரணை
காரும்-டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்து. பெண் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, கூம்பூர், பாம்புலபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி சித்ரா வயது 39. சித்ராவும் அவரது உறவினர் விஜயராக ராகவன் ஆகிய இருவரும் அவர்களுக்கு சொந்தமான டூவீலரில், மார்ச் 24ஆம் தேதி காலை 9 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை விஜயராகவன் ஓட்டிச் சென்றார். இவர்களது டூ வீலர் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பள்ளப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, எதிர்திசையில் ஈரோடு மாவட்டம், ரெங்கம்பாளையம், அனு கார்டன் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் வயது 39 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் விஜயராகவன் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் டூவீலரின் பின்னால் அமர்ந்து வந்த சித்ராவுக்கு தலை, இடது கால், வலது தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்ரா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story