கார் - வேன் மோதல் : ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
பெருந்துறை அருகே காரும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரை ஓட்டி வந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துகாளிபட்டி பகுதியை சேர்ந்தவர் சைலேஷ்வர். இவர் கோவையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது காரில் பெருந்துறை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் பிரிவு அருகே கார் சென்ற போது கார் சைலேஷ்வர் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த ஈச்சர் வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சைலேஷ்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஈச்சர் வேனை ஓட்டி வந்த ஈரோட்டைச் சேர்ந்த சிவா, மச்சேந்திரன், ராகுல் ஆகிய மூவரும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துரை காவல்துறை காயம் பட்ட மூவரையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சைலேஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story