மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் நெறிவழி காட்டும் நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் நெறிவழி காட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மையத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் போட்டித்தேர்வுக்காக பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலமாக அவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செய்வது மற்றும் தொழில்நெறி வழிகாட்டி துறை மூலமாக அவர்களுக்கு புதிதாக தொழில் தொடங்குவதற்கு கடன்களை பெறுதல், புதிய தொழில்களை தொடங்குவதற்கு பயிற்சிகளை வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை நமது மாவட்டத்தில் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம். அதுவும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருசக்கர வாகனங்களை கூடுதலாக பெற்று வழங்கி உள்ளோம். மேலும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

குறிப்பாக கடனுதவி திட்டங்கள் அதாவது தமிழ்நாடு அரசின் மானியத்தால் வழங்கக்கூடிய கடனுதவி திட்டங்கள் நமது மாவட்டத்தில் எவ்வளவு மானியம் வந்ததோ அதற்கு இணையான கடன்களை பெற்று நாம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகின்றோம். தொழில்களை நாம் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் பயிற்சிகளும் இருக்கிறது. என்னென்ன தொழில்கள் இருக்கிறது. என்னென்ன பயிற்சிகள் வழங்குகிறாhர்கள். என்னென்ன மானியம் இருக்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு புதிதாக ஆலோசனைகள் வழங்கி, பயிற்சிகளை வழங்கி, அதன்பிறகு தொழில்களை தொடங்குவதற்குரிய கடன்களை பெறுவது எவ்வாறு என்பது குறித்தும் முழுமையான தகவல்களை மாவட்ட தொழில்மையம் வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Tags

Next Story