அய்யப்பா கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கு

அய்யப்பா கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கு
கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆட்சியர்
அய்யப்பா கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கு கலெக்டர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் கலை மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியானது நாகர்கோவில் சுங்கான் கடை ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி கலையரங்கில் இன்று (15.02.2024) நடைபெற்றது.

இக்கருத்தரங்க நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கல்லூரி மாணவர்களிடையே பேசுகையில்:- மத்திய அரசால் நடத்தப்படுகின்ற யு.பி.எஸ்.சி தேர்வுகள், மாநில அரசால் நடத்தப்படுகின்ற குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

மேலும் 1992ம் ஆண்டு வரை இந்திய இராணுவத்தில் பெண்கள் பணியாற்ற முடியாத சூழல் இருந்த நிலையில், தற்போது முப்படைகளிலும் அதிகளவில் பெண்களுக்கு என இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றினை நன்கு தெரிந்து, இராணுவத்துறையிலும் பணியாற்றிட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, மத்திய மாநில அரசுகள் நடத்துகின்ற அனைத்து போட்டித்தேர்வுகளை மாணவ மாணவியர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு – 2024 கையேட்டினை வெளியிட்டதோடு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல், ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் வி.ஆர்.அஞ்சனா, மாவட்ட தொழில் மைய மேலாளர் பெர்பெட், பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story