மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி 2 நாட்கள் நடந்தது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் வேலைவாய்ப்பு அமைப்பு, சேலம் கான்பிடோ நிறுவனத்துடன் இணைந்து இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி 2 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடத்தின. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்கலைக்கழகத்தின் தர கட்டுப்பாட்டு பிரிவு இயக்குனர் ஞானசேகர், கல்வியியல் பிரிவு துணை இயக்குனர் ராஜன் சாமுவேல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
சிறப்பு பயிற்சியாளர்களாக கான்பிடோ பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரவணபெருமாள், இயக்குனர் மதுமிதா கிரி உள்ளிட்ட இதர பயிற்சியாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறன்களை வளர்ப்பதற்கான பல்வேறு பயிற்சிகளை வழங்கினர். முடிவில் பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான எற்பாடுகளை துறையின் வேலைவாய்ப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை தமிழ்சுடர், உதவி பேராசிரியை தீபிகா மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.