கார்கள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் காயம்

கார்கள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் காயம்
X

காவல் நிலையம் 

மண்ணச்சநல்லூர் அருகே பெரக்கம்பியில் கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் பொம்மனம்பாடி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் 24 வயதான வேல்முருகன்.இவர் தனது காரில் பெரக்கம்பி எதுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான விஜய் அதே சாலையில் எதிர் திசையில் காரில் வந்து கொண்டிருந்தார். இந்த காரில் 28 வயதான மணிமாறன், 22 வயதான நிதிஷ்குமார், 24 வயதான விவேகானந்தன், 23 வயதான அருண்குமார் ஆகிய 5 பேர் இந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 24 ம் தேதி மதியம் 2 மணியளவில் பெரகம்பி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் காரை ஓட்டி வந்த வேல்முருகன் மற்றும் எதிர் திசையில் வந்த காரில் உட்காருரிந்த மணிமாறன், நிதீஷ்குமார், விவேகானந்தன் அருண்குமார் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தைக் கண்ட அக்கம் பக்கதினார் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story