பாரம்பரியத்தை மீட்டெடுக்க நுங்கு வண்டி பந்தயம்

பாரம்பரியத்தை மீட்டெடுக்க நுங்கு வண்டி பந்தயம்
நுங்கு வண்டி
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பாரம்பரியத்தை மீட்டெடுக்க நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்ற நிலையில் எல்இடி டிவி பரிசாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பிளாமிச்சம்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டினை மீட்டெடுக்கும் விதமாக நடைபெற்ற இப்போட்டியில் ஆர்வத்துடன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை 22 பேர் கலந்து கொண்டனர். கல்லல் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பந்தயத்தில் சிறு குச்சியை கொண்டு நுங்கு வண்டியை லாபமாகவும், விரைவாகவும் வீரர்கள் ஓட்டிச் சென்றனர்.

பாரம்பரிய விளையாட்டான இந்த நுங்குவண்டி பந்தயத்தில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்றனர். போட்டியினை பனங்குடி, பிளாமிச்சம்பட்டி, நடராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கைதட்டி கண்டுகளித்தனர். போட்டியில் முதலிடம் பிடித்த வீரருக்கு எல்ஈடி டிவி பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags

Next Story