போதை பொருள்கள் விற்றதாக 15 பேர் மீது வழக்கு

போதை பொருள்கள் விற்றதாக 15 பேர் மீது வழக்கு

பைல் படம் 

குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திங்கள் நகர் - நெய்யூர் சாலையில் ஒரு கடை அருகில் சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 24 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் ஜோசப் சேவியர் (58) என தெரிய வந்தது. மேலும் தலக்குளம் பகுதியில் லைசாள் (60) என்பவரை போலீசார் கைது செய்து அவர் வைத்திருந்த 10 புகையிலை பாக்கெட்டுகள் பறிகுதல் செய்தனர். மேலும் தக்கலை, வடசேரி, கோட்டார், நேசமணி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்டம் முழுவதும் நேற்று 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story