வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு !

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்கு !

வழக்கு

கன்னியாகுமரியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (34) இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். ராமச்சந்திரன் தாய் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஜெப கூடத்திற்கு செல்வது வழக்கம். அங்கு வைத்து பொன்னப்ப நாடார் காலனியை சேர்ந்த பிராங்கிளின் அவரது மனைவி ஜான்சி ராணி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. பிராங்கிளின், ஜான்சிராணி ஆகியோர் ராமச்சந்திரனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக அவர் தாயாரிடம் தெரிவித்து ரூ. 4 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்தால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய அவர் பல தவணைகளாக வங்கிக் கணக்கு முதல் மூன்று லட்சத்தை பிராங்கிளின், ஜான்சி ராணி, பட்டுகோட்டை சேர்ந்த பழனிவேல் ஆகிவருக்கு வழங்கி உள்ளனர். மேலும் பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து ராமச்சந்திரன் கொடுத்த பணத்தையும் பாஸ்போர்ட்டையும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம், பாஸ்போர்ட்டை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் விசாரித்த நீதிபதி இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நேசமணி நகர் போலீசருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேசமணி நகர் போலீசார் பிராங்களின், ஜான்சிராணி, பழனிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story