முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

காவல்துறை 

முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நிலத்தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன், 48; அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 5ம் தேதி காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரேம்குமார் தனது உறவினர்கள் 4 பேருடன், சேர்ந்து பலராமனைத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பலராமன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், பிரேம்குமார், சேட்டு, ராமர், பிரித்திகா ஆகிய 4 பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story