நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
குமரி மாவட்டம், நாகர்கோவில் கட்டபொம்மன் ஜங்ஷன், கீழத்தெரு பகுதி சேர்ந்தவர் நாகராஜன் (38). ஆரல்வாய்மொழி வணிகர் தெருவில் நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆரல்வாய்மொழி புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் நகை கடையை பூட்டி விட்டு நாகராஜன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். நாகர்கோவில் அப்டா மார்க்கெட் அருகே வரும்போது அங்கு வந்த பிரகாஷ், ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த விஜயன் (26), ரஞ்சித் குமார் 22) உட்பட ஐந்து பேர் வந்தனர். அவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து நாகராஜனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
காயம் அடைந்த நாகராஜன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகிறார்கள். இதில் விஜயன் என்பவர் மீது பல வழக்குகள் உள்ளன. மேலும் அவர் ரவுடி பட்டியலிலும் உள்ளார்.