சட்டக் கல்லூரி மாணவருக்கு வெட்டு 5 பேர் மீது வழக்கு 

சட்டக் கல்லூரி மாணவருக்கு வெட்டு 5 பேர் மீது வழக்கு 
X

வழக்கு 

நாகர்கோவிலில் சட்டக் கல்லூரி மாணவருக்கு வெட்டு 5 பேர் மீது வழக்கு 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தட்டான் விளை, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் ஆதிஷ் (24). இவர் திருப்பதியில் உள்ள சட்ட கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதிஷ் திருப்பதியில் இருந்து ஊருக்கு ரயிலில் வரும்போது, ஆதிசுக்கும் அதே கல்லூரியில் படித்து வரும் வடசேரி பகுதி சேர்ந்த அஜித், ஜூடித் மற்றும் சிலருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆதீஷ் தட்டான் விளை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அஜித் , ஜுடித் மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆதிசை சரமாரியாக தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் ஆதிசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story