விழுப்புரம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 65 பேர் மீது வழக்கு
காவல் நிலையம்
விழுப்புரம் அருகே அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 65 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அருகே அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்ற அதிமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 65 பேர் மீது வழக்கு பதிந்தனர். விழுப்புரம் அடுத்த கோலியனூர் புத்துவாழியம்மன் கோவில் அருகே கடந்த 1ம் தேதி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் தலைமையில் 50 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் உள்ளிட்ட அதிமுகவினர் அனுமதியின்றி கூட்டம் நடத்த முயன்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலிறிந்த தேர்தல் கண்காணிப்பு அலுவலர் விழுப்புரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் வளவனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
மேலும் இதுகுறித்து வளவனூர் போலீசார் ஒன்றிய செயலாளர் பேட்டைமுருகன் உள்ளிட்ட 65 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story