பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காதலன் மீது வழக்கு
பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காதலன் மீது வழக்கு
ஜோலார்பேட்டை அருகே பெண் வழக்கறிஞரை காதலித்து திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி ஏமாற்றிய காதலன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த சங்கீதா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வயது 25 வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் எம் எம் நகர் சேர்ந்த அபிலாஷ் என்பவரை கடந்த நான்காண்டுகளாக காதலித்த வந்தன இந்நிலையில் காதலன் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி காதலி ஓசூருக்கு சென்று காதலனிடம் திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார் இதனால் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் இதனால் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வழக்கறிஞர் மன வேதனையில் இருந்தவர் சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் தனது வீட்டில் இருந்த ஓர் அட்டை மாத்திரை முழுவதும் சாப்பிட்டு மயங்கி விழுந்தார் இதனால் வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கறிஞர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசைவார்த்தை கூறி வழக்கறிஞரை ஏமாற்றியதாக அபிலாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story