சொத்து பிரச்னையில் தந்தையை தாக்கிய மகள் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி அருகே உள்ள வாய் பூட்டான் பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 75. இவருடைய மகள் செல்வி வேலுச்சாமிக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கொடிக்காய் மரத்தை செல்வி வேறு ஒருவருக்கு குத்தகைக்கு விட போவதாக கூறியுள்ளார் .இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தான் உயிரோடு இருக்கும் வரை மரத்தை குத்தகைக்கு விடக்கூடாது என வேலுச்சாமி கூறியதாகவும் இது தொடர்பாக அவருடைய மகளுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மகள் செல்வி தந்தையை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த தந்தை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்