மனைவியை தாக்கிய கணவன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு

கரூரில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல்,மனைவியை தாக்கிய, கணவன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

கரூரில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல்,மனைவியை தாக்கிய, கணவன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

குடும்ப வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் மனைவியை தாக்கிய கணவன் உள்பட நான்கு பேர் மீது வழக்கு. இருவர் கைது. இருவர் தலைமறைவு. கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சாலப்பாளையம், ஜெயந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் வயது 34. இவருக்கும் மன்மங்கலம் தாலுக்கா, அண்ணா நகர், என்.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் வான்மதி வயது 26 என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக விவாகரத்து கேட்டு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப வன்முறை சட்டத்தின் அடிப்படையில், வான்மதிக்கு லோகநாதன் மாதம் 20 ஆயிரம் ஜீவனாம்சமும், 2 லட்சம் முன்பனமும், திருமணத்தின்போது கொடுத்த நகைகளை அனைத்தையும் திருப்பி வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் லோகநாதன் இருந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வான்மதி லோகநாதன் வீட்டை தனது பெயருக்கு எழுதி தர கூறி அக்டோபர் 25ஆம் தேதி சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த லோகநாதன், அவரது மற்றொரு மனைவி சந்தியா,அவரது தாயார் பாலம்மாள், சகோதரர் செந்தில்குமார் ஆகிய நான்கு பேரும், வான்மதியை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, துன்பப்படுத்தி, மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வான்மதி,க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், லோகநாதன் மற்றும் அவரது சகோதரர் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய சந்தியா மற்றும் பாலம்மாள் ஆகியோர் கைது செய்யப்படவில்லை.

Tags

Next Story