லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விழுப்புரத்தில் லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து நபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜனார்த்தனன்(34) இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி(27) இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. பாலாஜியும் மேலும் 2 நபர்களுடன் சேர்ந்து, சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகே நின்றுகொண்டிருந்த, ஜனார்த்தனனிடம் வீண்தகராறு செய்து, திட்ட கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story