குமரியில் எம் எல் ஏ மற்றும் நடிகர் சிங்கமுத்து மீது வழக்கு !
வழக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி காந்தி நகர் பகுதியில் எந்த ஒரு அனுமதியம் இன்றி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, நடிகர் சிங்கமுத்து உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாள குறிச்சி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டதில், அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரத்திற்கு ஆதரவாக ஐந்தாயிரம் நோட்டீஸ்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த நோட்டீசுகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து பறக்கும் படை அதிகாரிகள் மனவளக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும் அதிமுக மாவட்ட இணை செயலாளருமான சாந்தனி பகவதியப்பன் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story