தம்பியை தாக்கிய சகோதரிகள் மீது வழக்கு
தம்பியை தாக்கிய சகோதரிகள் மீது வழக்கு
கள்ளக்குறிச்சியில் சொத்து பிரச்னையில் தம்பியைத் தாக்கிய சகோதரிகள் மீது வழக்கு. போலீசார் விசாரணை.
கள்ளக்குறிச்சியில் சொத்து பிரச்னையில் தம்பியைத் தாக்கிய சகோதரிகள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் சாமுவேல், 43; இவருக்கும், அவரது சகோதரிகள் கள்ளக்குறிச்சி சுந்தர் மனைவி வினோலியா, 47; ஆத்துார் கணேசன் மனைவி மேரி ஆகியோர் இடையே சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 25 ம் தேதி மதியம் 1:00 மணியளவில் சாமுவேல் வீட்டிற்கு சென்ற வினோலியா, மேரி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் சாமுவேலுவை வீட்டை காலி செய்யுமாறு கூறி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் வினோலியா, மேரி, கணேசன் ஆகிய 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story