டோல்கேட்டில் தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்கு

டோல்கேட்டில் தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்கு

டோல்கேட்டில் தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்கு

உளுந்துார்பேட்டை டோல்கேட் ஊழியர்களுக்கும், வி.சி.க கட்சியினருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது வழக்கு பதிவு.
கடலுார், வில்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அய்யப்பன், 26; வி.சி.க கட்சி நிர்வாகி. இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் நடந்த வி.சி.க, கட்சி கூட்டத்தில் பங்கேற்று காரில் உளுந்துார்பேட்டை டோல்கேட் வழியாக சென்றார். அப்போது டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தும்படி டோல்கேட் ஊழியர்கள் கேட்டதால் அய்யப்பன் மற்றும் அவருடன் காரில் வந்த கட்சியினர் டோல்கேட் ஊழியர்களிடம் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில், டோல்கேட் ஊழியர்களான ஒடப்பன்குப்பம் வீரவேல், 40;, கட்சியைச் சேர்ந்த அய்யப்பன், மாசியோ, ஹனாஸ்ட் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story