தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
சிவகாசி அருகே முன் விரோதம் காரணமாக தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி சித்தமநாயக்கன்பட்டிய சேர்ந்தவர் சக்திவேல் மகன் அருணாச்சலப்பாண்டி (31).இவர் சுக்கிரவார்பட்டியில் உள்ள ஒரு அட்டை மில்லில் வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று எம்.புதுப்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வீரசின்னு (26) என்பவர் முன்விரோதம் காரணமாக அருணாச்சலப்பாண்டியிடம் தகராறு செய்து அவர் மீது மது பாட்டிலை எறிந்து விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வீரசின்னு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story