கணவன் மனைவியை தாக்கியதாக மூன்று பேர் மீது வழக்கு

கணவன் மனைவியை தாக்கியதாக மூன்று பேர் மீது வழக்கு

கணவன் மனைவியை தாக்கியதாக மூன்று பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்காடுவெட்டிவிளை பகுதியில் முருங்கைகாய் பறித்ததால் ஏற்பட்ட தகராற்றில் கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை அருகே உள்ள புதுக்காடுவெட்டி விளை பகுதியை சேர்ந்தவர் செலின் கிறிஸ்டோபர் (37) இவருடைய மனைவி பெல்சி மேரி (33). இவர் கண்டன் விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினம் வீட்டு அருகே உள்ள முருங்கை மரத்தில் உள்ள பூவை அதே பகுதியை சேர்ந்த ராஜம் என்பவர் பறித்ததாக தெரிகிறது. இதை கிறிஸ்டோபர் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவு செலின் கிறிஸ்டோபர் அவர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜம் மகன்கள் சந்து, சஞ்சு மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து செலின் கிறிஸ்டோபரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பெல்சி மேரியை கல்லால் தாக்கி, தப்பி சென்றனர். கணவன் மனைவி இருவரும் காயம் அடைந்தனர். பெல்சி மேரி குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சந்து உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து இரணியல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story