ஊராட்சி துணைத் தலைவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

ஊராட்சி துணைத் தலைவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு
X

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் 

கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுார் ஊராட்சி மன்ற துணை தலைவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுாரைச் சேர்ந்தவர் ஜாகீர்உசேன், 34; ஊராட்சி துணைத் தலைவர். அதே ஊரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இருவருக்குமிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 30 ம் தேதி இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், பாலகிருஷ்ணன், அவரது உறவினர்கள் வெங்கடேசன், மணிகண்டன், ஆகியோர் ஜாகீர்உசேனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் பாலகிருஷ்ணன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story