போலி ரேஷன் அட்டை அச்சிட்ட இருவர் மீது வழக்கு

போலி ரேஷன் அட்டை அச்சிட்ட இருவர் மீது வழக்கு
X

போலி ரேஷன் அட்டை அச்சிட்ட இருவர் மீது வழக்கு

தனியார் இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் ஆய்வு செய்தபோது, போலியாக ரேஷன் அட்டையை அச்சிட்டு விற்பனை செய்த இருவரின் மீது வழக்கு.
காஞ்சிபுரம் புத்தேரி தெருவில், இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை ஆகிய இடங்களில், போலி ரேஷன் கார்டு அச்சிடுவதாக பொது வினியோக திட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, தாசில்தார் இந்துமதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக புத்தேரி தெருவில் ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள தனியார் இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் ஆய்வு செய்தபோது, போலியாக ரேஷன் அட்டையை அச்சிட்டு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடை நடத்தி வந்த கைலாசநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் மற்றும் புத்தேரியைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவரையும் பிடித்து, சிவகாஞ்சி போலீசில் ஒப்படைத்துள்ளனர். சிவகாஞ்சி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story