2-வது திருமணம் செய்து சித்ரவதை செய்ததாக சாப்ட்வேர் என்ஜினீயர் மீது புகார் செய்த இளம்பெண் மீது வழக்கு

2-வது திருமணம் செய்து சித்ரவதை செய்ததாக சாப்ட்வேர் என்ஜினீயர் மீது புகார் செய்த இளம்பெண் மீது வழக்கு

2-வது திருமணம் செய்து சித்ரவதை செய்ததாக சாப்ட்வேர் என்ஜினீயர் மீது புகார் செய்த இளம்பெண் மீது வழக்கு

2-வது திருமணம் செய்து சித்ரவதை செய்ததாக சாப்ட்வேர் என்ஜினீயர் மீது புகார் செய்த இளம்பெண் மீது வழக்கு. போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம் செய்ததால் நடவடிக்கை.
சேலம் திருவாகவுண்டனூரை சேர்ந்தவர் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் உயிரிழந்தார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடைேய கடந்த 9-ந்தேதி இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி அவரை தேடிய போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அப்போது அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்தார். தற்போது மகன்களை பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும், எனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார் என்று கூறினார். மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் அவருக்கு 57 வயது என்பது தெரிய வந்தது. தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி கொடுமைப்படுத்துவதாக கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து போலீசார் அவரை அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து பாஸ்கரை போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்த டவுன் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீஸ் வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்து போராடியதுடன், போலீசாரை தரக்குைறவாக பேசியதாக ஆர்த்தி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story